ஜார்ஜியாவின் காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் MBBS படிப்புகள்!

ஜார்ஜியா

ஜார்ஜியா என்பது யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதையும் உள்ளடக்கியது) கண்டத்தின் காகசஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு. இது மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் எல்லைகளில் அமைந்துள்ளது மற்றும் அதன் எல்லைகளை கருங்கடல் வரைந்துள்ளது. திபிலிசி ஜார்ஜியாவின் மிகப்பெரிய நகரம் மற்றும் அதன் தலைநகரமும் ஆகும்.

 

ஜார்ஜியாவின் காலநிலை மிகவும் வேறுபட்டது, கிழக்குப் பகுதி வெப்பத்திலிருந்து மாறுபடும் ஈரப்பதமான காலநிலையுடனும், மேற்கு பகுதி கோடை மற்றும் குளிர்காலத்தையும் அனுபவிக்கிறது. ஜார்ஜியா வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த கல்வி முறையும் அங்கு உள்ளது, இது மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் முழு கவனம் செலுத்துகிறது.

best course finder

ஜார்ஜியாவின் காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கு MBBS படிப்புகளை வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு டாக்டராக விரும்பினால், உங்களுக்கான சரியான நேரம் கிடைத்துள்ளது. இப்போதே உங்கள் படிப்பை திட்டமிடுங்கள்!

 

காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகம்

 

இந்த பல்கலைக்கழகம் 1995 ஆம் ஆண்டில் ஜார்ஜியாவின் திபிலிசியில் நிறுவப்பட்டது. ஒரு பெரிய வளர்ச்சியுடன், இந்த தனியார் பல்கலைக்கழகம் இப்போது தெற்கு காகசஸ் பிராந்தியத்திலும் ஜார்ஜியாவிலும் மிக முக்கியமான உயர்கல்வி நிறுவனமாக இருக்கிறது. ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் லா, ஸ்கூல் ஆஃப் மீடியா, ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸ், ஸ்கூல் ஆஃப் டூரிஸம், ஸ்கூல் ஆஃப் சோசியல் சயின்சஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் ஹெல்த்கேர் ஆகிய எட்டு பள்ளிகளை இந்த பல்கலைக்கழகம் இணைத்து நிர்வகிக்கிறது. மகத்தான நிர்வாகத்துடன், இப்பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் பட்டங்களையும் வழங்கி வருகிறது.

 

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய மேலாண்மை மேம்பாட்டுக் கழகம் (CEEMAN), சர்வதேச பல்கலைக்கழகத் தலைவர்கள் சங்கம் (IAUP), ஐரோப்பிய அறக்கட்டளை மற்றும் மேலாண்மை மேம்பாடு (EMFD),  குளோபல் காம்பாக்ட் மற்றும் பல சங்கங்களுக்கான உறுப்பினர்களும் இணைப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளன.

 

இந்த பல்கலைக்கழகம் ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகம், துருக்கியின் இஸ்தான்புல் பில்கி பல்கலைக்கழகம், கனடாவின் செயிண்ட் மேரி பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம், பிரான்சின் ISCID, இங்கிலாந்தின் செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் பல புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சங்கங்களைக் கொண்டுள்ளது.

 

MBBS ஸிற்கான படிப்புகளை இப்பல்கலைக்கழகம் தற்போது திறந்துள்ளது, நீங்கள் ஒரு டாக்டராக விரும்பினால் உங்களுக்கான சரியான நேரம் கிடைத்திருக்கிறது …

 

பாடநெறி விளக்கம்

 

காகசஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் – இந்த திட்டம் முழு ஐரோப்பாவிலும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ திட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மருத்துவ பீடம் பல ஆண்டுகளாக உருவாகி மேம்பாட்டின் மூலம் ஒரு புகழ்பெற்ற கல்வித் திட்டம், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கு வழிவகுத்திருக்கிறது…

 

இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் ஐரோப்பிய மருத்துவ நிலைமைகளின் யதார்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். நடைமுறை பயிற்சி மற்றும் ஹைடெக் ஆய்வகங்களின் மூலம், நீங்கள் வளர்ந்த மருத்துவ நடைமுறைகளை கற்றுக்கொள்வீர்கள். சர்வதேச மாணவர்களுக்கேற்றார் போன்று வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் ஜார்ஜிய மொழிகளில் கற்பிக்கப்படுவதால் ஜார்ஜியா MBBS படிக்க சிறந்த இடமாக உள்ளது.

 

தொழில்முறை மற்றும் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பெற உதவும் பாடத்திட்டத்தில் சுமார் 70% மருத்துவ நடைமுறைப் பயிற்சியில்  உள்ளது. ஒரு சர்வதேச மாணவராக, அந்தந்த துறையில் உலகளாவிய அரங்கில் பொருந்துவதற்கு தகுதியான நிபுணராக நீங்கள் பயிற்சி பெறுவீர்கள். ஐரோப்பாவில் உங்கள் மருத்துவ வாழ்க்கையைத் தொடங்க விரும்பினால், இது சரியான வாய்ப்பு. ஜார்ஜியாவில் உங்கள் கல்வியைத் திட்டமிடுங்கள்.

 

ஜார்ஜியாவில் MBBS படிப்பதன் நன்மைகள்

 

ஜார்ஜியாவில் படிப்பதன் நன்மைகள் பற்றி நாம் பேச வேண்டுமென்றால், நேரம் எப்போதும் போதாது, ஏனெனில் அந்த நன்மைகள் முடிவற்றவை. ஜார்ஜியாவில் தங்கள் படிப்பைத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கு சில முக்கியமான நன்மைகள் பின்வருமாறு;

 

  • உங்கள் சேர்க்கைகளை எளிதில் பெறுவது
  • கல்வி ஆங்கிலத்தில் இருப்பதால் மொழி சிக்கல் இல்லாமை
  • வளர்ந்த மற்றும் சிறந்த கல்வி முறை
  • பாதுகாப்பான சூழல்கள்
  • கண்கவர் உள்கட்டமைப்பு
  • குறைந்த கல்வி கட்டணம் மற்றும் அடிப்படைச் செலவுகள்
  • படிப்புத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள்
  • சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
  • சிறந்த வெளிநாட்டு அனுபவத்தைப் பெறுவது
  • உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெறுவது

 

ஜார்ஜியாவின் காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் உங்கள் MBBS ஆய்வைத் திட்டமிடுவதன் மூலம் நீங்கள் பெறும் நீண்ட கால நன்மைகள் இவை. உங்கள் செயல்முறையை இப்போது தொடங்கவும்! பதிவு பகுதிக்கு செல்லுங்கள்…

Psychology for Victimology Victims of Crime

பதிவு செயல்முறை

ஜார்ஜியாவில் உள்ள காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களின் கல்விக்கு பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. MBBS ஸிற்கான படிப்புகள் இப்போது மார்ச் 2020 க்கு திறக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு டாக்டராக விரும்பினால், CanApprove உடன் விண்ணப்பிக்கவும். நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம்.

 

1998 ஆம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிநாட்டு ஆர்வலர்களுக்கு சிறந்த வெளிநாட்டு கல்வி மற்றும் குடிவரவு சேவைகளை வழங்கி வருகிறோம்!

உங்கள் வெளிநாட்டு கல்வித் திட்டத்தின் சாத்தியமான ஒவ்வொரு அம்சத்திலும் உங்களுக்கு வழிகாட்ட எங்கள் குழு இங்கே உள்ளது. ஜார்ஜியாவில் MBBS படிப்பது பற்றி மேலும் அறிய எங்களுடன் இணைந்திருக்கவும்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்: bit.ly/mbbs_georgia

அழைப்புக்கு: 91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

2 thoughts on “ஜார்ஜியாவின் காகசஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் MBBS படிப்புகள்!